Saturday, October 6, 2018

ஆங்கிலம் அறிவோமே - 94: கருத்து வேறுபாடுகளைப் புதைக்கலாமே?

ஒரு வாசகர் ‘Drug என்றால் மருந்தா, போதைப் பொருளா?’ என்று கேட்டிருக்கிறார். அவரது குழப்பத்துக்கான காரணம் புரிகிறது. Drug என்றால் மருந்து தான். அதனால்தான் pharmaceutical drug என்றால் ஒரு நோய்க்கான மருந்து என்று கொள்கிறோம்.

Drug trafficking என்றால் போதைப் பொருள்களை விநியோகம் செய்வது, உற்பத்தி செய்வது ஆகிய எல்லாமே அடங்கும். இந்த இடத்தில் பயன்படுத்தப்படும் drug என்பது narcotic drug. அதாவது போதை மருந்து.

“ என் அலுவலகத்தில் என் மேல் அதிகாரிகள் தங்கள் குறிப்புகளில் rope in, zero in, beef up போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆங்கில அகராதிகளைப் பார்த்தாலும் இவற்றுக்கான அர்த்தத்தை விளங்கிக் கொள்ள முடியவில்லை. உதவ வேண்டும்’’ என்கிறார் ஒரு வாசக நண்பர்.

அவர் குறிப்பிட்டிருக்கும் பயன்பாடுகளை idioms என்பார்கள். ‘பால் வடியும் முகம்’ என்பதின் அர்த்தம் புரியவில்லை என்றால் அகராதியைப் பாரத்தாலும் விளங்காது. பால், வடியும், முகம் ஆகிய மூன்று வார்த்தைகளுக்குத் தனித்தனியான அர்த்தங்கள் அகராதியில் இருக்கும். ஆனால் இவற்றை இணைத்துப் பயன்படுத்தும்போது உணர்த்தப்படும் ‘அப்பாவித்தனமான முகம்’ அல்லது ‘குழந்தையைப் போன்ற முகவெட்டு’ என்பதை அகராதியின் மூலம் அறிய முடியாதுதான்.

இப்போது வாசகர் கேட்டிருக்கும் வார்த்தைகளோடு அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் இதே போன்ற வேறு சில சொற்றொடர்களையும் பார்ப்போம்.

Rope in என்றால் ஏதோ நாம் சிறையில் இருக்க யாரோ ஜன்னல் வழியாக நாம் தப்பிக்க கயிறை அனுப்பி உதவுகிறார்கள் என்பதில்லை.Rope in என்றால் யாரையாவது உதவ வேண்டும்படி வற்புறுத்துவது.

Beef up என்றால் “No No. Beef down’’ என்று இந்து முன்னணிக்காரர்கள்கூட பதறக் கூடாது. Beef up என்றால் ஒன்றை வலிமைப்படுத்துவது. ‘They beefed up the order with another 10,000 rupees’ என்றால் தாங்கள் அளிப்பதை மறுக்க முடியாமல் தங்கள் தரப்பை மேலும் வலிமைப்படுத்துகிறார்கள் என்று அர்த்தம்.

Toy with என்றால் ஏதோ ஒரு ஐடியாவை கேஷுவலாக யோசிப்பது என்று அர்த்தம். அதாவது எந்த முடிவும் எடுத்துவிடவில்லை. வெறும் யோசிக்கும் கட்டம்தான்.

Fuss over என்றால் தேவைக்கு அதிகமான கவனத்தை ஒன்றுக்கு அளிப்பது. இதைக் கொஞ்சம் எதிர்மறையாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.”நான் சினிமாவுக்கு வரலே. படிக்கணும்’’ என்பவரை அவரது ‘நண்பர்கள்’ஒரு புழுபோலப் பார்த்து “ரொம்ப fuss பண்ணாதே’’ என்பது இந்த ரகம்தான்.

Veer off என்றால் சட்டென்று ஒன்றிலிருந்து மாறுவது என்று பொருள். The speaker kept veering from his main topic. The car veered off the road.

Zero in என்றால் ஒன்றின் மீது குறிப்பாக (தீவிரமாக) கவனம் செலுத்துவது என்பதாகும். To focus on something. The camera zeroed in on the mischievous child.

Touch up என்றால் சிறுசிறு மாறுதல்கள் செய்து ஒன்றை மேம்படுத்துவது. முக ஒப்பனை தொடர்பாக இதை நாம் கேட்டிருப்போம்.

On the square என்றால் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் என்று அர்த்தம். Out of square என்றால் ஒப்புக்கொள்ளவில்லை என்று பொருள்.

Square off என்றால் சண்டையிடத் தயாராவது என்று அர்த்தம். The two teams will square off next week in the finals.

Let us iron out the differences என்றால் நமக்கிடையே உள்ள உரசல்களைத் தீர்த்துக் கொள்வோம் என்று அர்த்தம்.

Sign on என்றால் ஆவணத்தில் கையெழுத்திடுவது. ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர சம்மதிக்கும் விதத்தில் கையெழுத்திடுவது என்கிற பொருளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

I bank on you என்றால் நான் உன்னை நம்பி இருக்கிறேன் என்ற அர்த்தம்.

He stood out என்றால் அவன் வெளியே சென்று நின்று விட்டான் என்பது அர்த்தமல்ல. மற்றவர்களுக்கிடையே அவன் கவனிக்கத்தக்க அளவுக்கு சிறப்படைந்துவிட்டான் என்றுதான் அர்த்தம்.

Vying for என்றால் போட்டியிடுவது. Swimmers from many nations were vying for the title.

அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் வேறு சில idioms-ஐப் பிறகு பார்ப்போம்.

பலரும் solution என்ற வார்த்தையைத் தொடர்ந்து for என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். அது தவறு. தமிழில் சிந்திப்பதால் உண்டாகிற பிரச்சினை இது. We will find a solution for the problem என்பது தப்பு. இந்த இடத்தில் solution என்பதைத் தொடரும் preposition ‘to’ என்பதாகத்தான் இருக்க வேண்டும். This is the solution to the problem. Let us find a solution to illiteracy. When a lock is manufactured, its key is also manufactured. So there is always a solution to any problem. The Government should come forward to find a solution to the encroachments.

Solution என்பது திரவம் என்ற அர்த்தமும் கொண்ட வார்த்தை. அதாவது வேறொரு பொருள் இதில் முழுவதுமாகக் கரைந்திருக்கிறது. சர்க்கரை அல்லது உப்பு நன்கு கலக்கப்பட்ட தண்ணீர்போல. இந்தப் பொருளில் solution என்பதைப் பயன்படுத்தும்போது பக்கத்தில் of இடம் பெறுகிறது. A solution of ammonia in water என்பதுபோல.

சரி, அப்படியானால் for என்பதை எங்கு பயன்படுத்துவது? கீழே உள்ள எடுத்துக்காட்டுகளைப் படித்தால் தானாக விளங்கிவிடும்.

எனக்காக – for my sake.

பணத்துக்காக வேலை செய்கிறான். He works for the sake of money.

நல்ல நாளுக்காக காத்திருக் கிறோம். – We wait for a better future.

ஒரு வார்த்தையின் பிற்சேர்க்கையாக ‘ஆக’ என்பது இருக்கும்போது (எனக்காக, பணத்துக்காக, நாளுக்காக) for என்பதைப் பயன்படுத்துகிறோம்.

அதே சமயம் வேறு விதங்களிலும் for பயன்படுத்தப்படுகிறது. இவற்றைத் தமிழ்ப்படுத்திப் பொதுமையாக்கினால் குழப்பம் வரலாம். எனவே இந்த ஆங்கில வாக்கியங்களையே ஒருமுறைக்கு இருமுறை படித்தால் அந்த இடங்களில் for என்ற prepositionதான் இடம்பெற வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

He will be away for one week.

The train is bound for Bangaluru.

Prepare well for the examination.

Referee என்ன செய்வார்? Umpire என்ன செய்வார்? இது ஒரு வாசகரின் கேள்வி.

The umpire declared that the batsman was run out. இது அம்பயர் செய்தது.

The referee showed the red card for a foot ball player for his wrong behaviour.இது referee செய்யும் வேலைகளில் ஒன்று.

அதாவது குத்துச்சண்டை, கால்பந்து போன்ற ஆட்டங் களின் நடுவர் Referee. கிரிக்கெட், டென்னிஸ் போன்ற விளை யாட்டுகளின் நடுவர் அம்பயர்.

பட்டிமன்ற நடுவரை எப்படி அழைப்பது என்று என்னைக் கேட்காதீர்கள். அது உங்கள் judgement. (Judgment என்கிறார்கள் அமெரிக்கர்கள்).

ஆங்கிலம் அறிவோமே 93: நீங்களும் நானும் ஒரே படகில்

ஒரு நண்பர் ‘‘Demat Account-க்கு அந்தப் பெயர் ஏன் வந்தது?’’ என்று கேட்டார். இன்னொருவர் “Bearer cheque என்பதற்கு ஏன் அந்தப் பெயர்? ஹோட்டல்களில் bearer என்று ஒருவர் இருப்பாரே? அவருக்கும் இந்த வார்த்தைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா?’’ என்கிறார் இன்னொருவர். இன்னொரு வாசகர்“Laundering என்ற வார்த்தையைப் பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் பார்க்கிறேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்றும் ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.

Demat என்பதன் விரிவாக்கம் Dematerialized.

Materialize என்றால் நிஜமாகவே நடப்பது அல்லது ஒரு விஷயம் கனிவது என்று அர்த்தம். Her marriage materialized only recently.

எதிர்பார்த்தபடி ஒன்று நிகழ்வதையும் materialize என்பார்கள். The plan materialized. The train failed to materialize என்றால் அந்த ரயில் (விடுவதற்காகத் திட்டமிடப்பட்டாலும்) நடைமுறையில் நிகழவில்லை.

வங்கிக் கணக்குகளில் நாம் ரொக்கப் பணம் அல்லது காசோலைகளைப் போடுவோம், எடுப்போம். Demat கணக்குகளில் பணத்துக்குப் பதிலாக பங்குகள். பங்குச் சான்றிதழ்களை வீட்டில் வைத்திருந்தால் திருட்டு, தீவிபத்து போன்றவற்றால் அழியும். ஆனால் Demat account-ல் மின்னணு முறையில் பங்குச் சான்றிதழ்கள் வந்து சேர்கின்றன. அதாவது பங்குச் சான்றிதழ்கள் கைகளில் நிஜமாக வந்து சேர்வதில்லை. அதாவது ‘உண்மையில்’ நிகழ்வதில்லை. எனவே Dematerialized அதாவது சுருக்கமாக Demat.

Bear என்றால் எடுத்துச் செல்வது என்று அர்த்தம். ஹோட்டலில் உள்ள bearer-க்கு ஏன் அந்தப் பெயர் என்பது இப்போது உங்களுக்கு விளங்கி இருக்கும்.

இப்போது bearer காசோலைகளைப் பார்ப்போம். காசோலைகளைக் கிராஸும் செய்யவில்லை. (இடது மூலையில் சின்னதாக இரு இணை கோடுகள் போடுவோமே, அதுதான் கிராஸிங்), காசோலையில் உள்ள ‘or bearer’ என்ற வார்த்தையையும் அடிக்கவில்லை என்றால் அது bearer cheque. அந்தக் காசோலையை யார் எடுத்துச் சென்றாலும் காசோலைக்குரியத் தொகையை வங்கி அவருக்குக் கொடுத்துவிட வேண்டும்.

Laundry என்பதை அழுக்கான (துவைக்க வேண்டிய) துணிகளைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள். துவைத்து வந்த துணிகளைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள்! துவைப்பதற்கான அறையையும் இந்த வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் Laundering என்பது நேர்மைக்கு எதிரானது. அதாவது குறிப்பிட்ட பணம் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமல் இருப்பதற்காக ஒரு கணக்கிலிருந்து இன்னொன்றுக்கு மாற்றும் செயல். வரி ஏய்ப்பு அல்லது தவறான முறையில் வந்து சேர்ந்த பிரதிபலன் ஆகிய கோணங்களில் பணத்தை laundering செய்வதுண்டு.

சின்னக் கோடுகள்

இருவார்த்தைகளுக்கு நடுவே இடம் பெறக்கூடிய சின்னக் கோட்டை hyphen என்பார்கள். Government sponsored programmes என்பதில் Government மற்றும் sponsored ஆகிய வார்த்தைகளுக்கு நடுவே இருப்பது hyphen.

எதுபோன்ற வார்த்தைகளுக்கு நடுவே hyphen பயன்படுத்தப்பட வேண்டும்? இது குறித்து மிகத் தெளிவான விதிகளைக் காணோம். என்றாலும் தோராயமாக கீழே உள்ளபடி கூறலாம்.

6 months என்றால் hyphen வருவதில்லை. ஆனால் 6 months leave எனும்போது hyphen வருகிறது (இதையே எண்ணுக்குப் பதிலாக எழுத்தாக எழுதியிருந்தால் hyphen வராது. Six months leave). கீழே உள்ள எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள்.

10 gallon tub

6 years grant

300-Megabyte Memory

Self என்பது முன்னொட்டாக (prefix) இடம் பெற்றால் hyphen போட வேண்டும். Self-esteem, self-motivation, self-discipline, self-finance, self-government.

ஆனால் pre, multi, anti போன்றவற்றை முன்னொட்டுகளாகப் பயன்படுத்துப்படும்போது பெரும்பாலும் hyphen பயன்படுத்தப்படுவதில்லை.

Reusable, predestination, preposition, multimedia multimetre, antidote, antivirus, antibiotics. (Re-sent என்பதில் hyphen இருக்கிறது. அது இல்லையென்றால் அது resent (கசப்புணர்ச்சி அல்லது சீற்றம்) என்றாகிவிடும்).

ஒரு verb-ம் ஒரு verb அல்லாத வார்த்தையும், (பெரும்பாலும noun) இணைந்து ஒரு குறிப்பிட்ட பொருளை உணர்த்தும்போது hyphen அறிமுகமாகிறது. Pista-flavored ice cream, mosquito-repellent coil, mineral-rich drink, salt-free diet, corrosion-resistant metal.

ஆனால் ly என்று முடியும் வார்த்தைகளோடு hyphen பயன்படுத்தக் கூடாது. Fully equipped class room, highly developed country.

நீங்களும் நானும் ஒரே படகில்...

சிலபேர் “We sail in the same boat” என்று கூறுவதுண்டு. இப்படி ஒரு உரையாடலை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. “நாளை நீலகிரி எக்ஸ்பிரஸில் போகிறேன்’’ என்று ஒருவர் கூறினார். “நானும்தான். We are sailing in the same boat” என்றார் மற்றவர். அதாவது இவரும் அதே ரயிலில் செல்ல இருக்கிறாராம். இப்படிப் பயன்படுத்தக் கூடாது.

ஒரே மாதிரி நிகழ்வு அல்லது சூழல் என்பதைக் குறிக்க ‘Be in the same boat’ என்பது பயன்பட்டாலும் ‘ஒரே மாதிரி கஷ்டமான சூழலில் இருப்பதைக் குறிக்கத்தான் அதைப் பயன்படுத்த வேண்டும். (அதாவது ‘காகித ஓடம் கடலலை மேலே போவது போலே மூவரும் போவோம்’ என்பது போல). “Do not despair you are one of the millions in the same boat”.

வேண்டுமானால் மேற்படி உரையாடல் இப்படி இருக்கலாம். “நான் நீலகிரி எக்ஸ்பிரஸில் போகணும். வெயிடிங் லிஸ்டிலேயே இருக்கேன். டிக்கட் உறுதியாகுமான்னு தெரியலே’’.

“அப்படியா எனக்கும்தான். We are sailing in the same boat.”

சவால் தொனியில் இரண்டு வாசகர்களால் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் இவை.

1) டீக்கடையில் டீ ஆற்றுகிறார்களே அதை ஆங்கிலத்தில் எப்படிக் குறிப்பிடலாம்?

2) சம்பந்தி என்ற வார்த்தைக்கான ஆங்கில வார்த்தை எது?

உங்கள் விடைகளை அனுப்பலாமே.

ஆங்கிலம் அறிவோமே 92: சொல்வதும், பேசுவதும்

கீழே உள்ள மூன்று வார்த்தைகளை பாருங்கள். Tell - Speak - Say இவற்றில் எதை எப்போது பயன்படுத்த வேண்டும்?

சொல்வது அல்லது பேசுவது என்ற அர்த்தத்தில் மூன்றுமே பயன்படுத்தப்படுகின்றன. எனினும் பயன்படுத்துவதில் சில வித்தியாசங்கள் உள்ளன.

“ஒரு குறிப்பிட்ட நபருக்கோ, நபர்களுக்கோ தகவல் அளிப்பது’’ என்கிற அர்த்தத்தில் tell என்ற வார்த்தையைப் பயன்படுத்துவோம். இந்த வார்த்தையைத் தொடர்ந்து பெரும்பாலும் ஒருவரின் பெயர் (noun- ஆகவோ pronoun- ஆகவோ) இருக்கும்.

சில சமயம் say அல்லது speak என்ற வார்த்தைகளையும் மேலே குறிப்பிட்ட அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம்.

ஆனால் இப்படிப் பயன்படுத்தும் போது tell என்ற வார்த்தைக்குப் பிறகு பொதுவாக to என்ற preposition வருவதில்லை. எனினும் say என்ற வார்த்தைக்குப் பிறகு to வரும். Speak என்ற வார்த்தைக்குப் பிறகும் to வரும்.

Tell me about the novel. Did you like it?

Did you tell Prema about what happened at College yesterday?

The lawyer told us that we may not win the case.

What did Mahesh say to you when you failed to reach the target?

Speak to us about the happenings in your tour.

அதே சமயம் குறிப்பிட்ட நபரிடம் என்று இல்லாமல் சொல்வது என்ற அர்த்தத்தில் say பயன்படுத்தப்படும்போது அதற்குப் பிறகு to வருவதில்லை. Aditya says he does not like cakes. I said that the house was beautiful.

மொழிகளுக்கு முன்னால் talk என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில்லை speak-தான்.

I speak Hindi என்பது சரி. I talk Hindi என்பதோ I do not talk Hindi என்பதோ தப்பு. (I talk in Hindi என்பதுபோல் பேச்சுவழக்கில் பயன்படுத்துகிறார்கள்).

உத்தரவு போல் ஒன்றைப் பிறப்பிக்கும்போது tell என்பதைப் பயன்படுத்துகிறோம்.

I told him to wait for me. (I said என்பது இங்கே வராது).

பொதுவாக speak என்பது formal ஆனது.

LITTLE LITTLER - LESS

Short என்பதை shorter என்றும், big என்பதை bigger என்றும் ஒப்பிடுகையில் பயன்படுத்துகிறோம். அதுபோல little என்பதற்கான ஒப்பிடும் வார்த்தை எது? Littler என்ற ஒரு வார்த்தை இருக்கிறதா?

அளவில் (size) குறைந்ததாக இருக்கும்போது littler என்ற வார்த்தையைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.

எனினும் less அல்லது lesser ஆகிய வார்த்தைகளையே பல இலக்கண நூல்கள் ஒப்புக் கொள்கின்றன.

Less என்பதை வேறு எதற்குப் பயன்படுத்துகிறோம் என்பதையும் அறிந்துகொள்ளலாமே. எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் less என்பதைப் பயன்படுத்துவதுண்டு. A population of less than five lakhs, There were less than 200 men.

‘நிச்சயமாக இல்லை’ (certainly not) என்ற அர்த்தத்திலும் less பயன்படுத்தப்படுகிறது. She looked less than happy என்றால், குறைவான சந்தோஷத்துடன் இருக்கிறார் என்ற அர்த்தம் அல்ல. ‘நிச்சயமாக அவள் சந்தோஷமாக இல்லை’ என்றுதான் அர்த்தம்.

ஒன்றிலிருந்து கழிக்கும்போதும் less என்பதை பயன்படுத்துவதுண்டு. Rs. 1 lakh less tax deducted at source.

மேலே குறிப்பிட்டவை புழக்கத்தில் வந்துவிட்டன. கிட்டத்தட்ட அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. என்றாலும் less என்ற வார்த்தையை எண்ணக்கூடிய (அதாவது count செய்யக்கூடிய) பொருள்களுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றுதான் கண்டிப்பான இலக்கண ஆசிரியர்கள் கூறுவார்கள். அதாவது less water என்று கூறலாம். Less people என்று கூறக் கூடாது. Less time என்று கூறலாம். Less words என்று கூறக் கூடாது. அதாவது fewer people, fewer words என்றுதான் குறிப்பிட வேண்டும்.

Less and less என்றால் தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது என்று அர்த்தம். He worked less and less என்றால் ஒருவர் மிகக் குறைவாக வேலை செய்கிறார் என்று அர்த்தமில்லை. அவர் வேலை செய்வது தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது என்று அர்த்தம்.

Less than என்பதுபோல lesser than என்று குறிப்பிடலாமா? Lesser of என்று குறிப்பிடலாம். Lesser than என்பது வேண்டாமே. மாறாக fewer than எனலாம்.

Less என்பதே ஒப்பிடல் என்பதால்தான் இந்தக் குழப்பம். Big, small என்பவை ஒப்பிடும் வார்த்தைகள் அல்ல.

MODERATION MODERNIZATION

Moderation என்றால் என்ன அர்த்தம்? நவீனமயமாதல் என்பதா? இல்லை. இந்த வார்த்தை modern என்பதிலிருந்து வந்ததல்ல. Moderate என்றால் மிதமான (அதாவது இரண்டு எல்லைகளும் இல்லை நடுவாந்திரம்). Moderation என்றால் மிதம். The Press urged the Police to show moderation.

Modernization என்றால் நவீனங்களுக்கு ஏற்ப அல்லது புதியவற்றுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளுதல். The Industry is undergoing modernization.

‘‘Alumna என்று ஒரு வார்த்தையை நாளிதழில் படித்தேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்று கேட்டார் ஒரு நண்பர்.

Alumnus என்றால் ஒரு கல்விக் கூடத்தின் முன்னாள் மாணவர். Alumni என்பது Alumnus என்ற வார்த்தையின் பன்மைச் சொல். Alumna என்பது பெண்பால் அதாவது முன்னாள் மாணவி.COMPREHEND

Comprehend என்றால் ஒன்றைச் சரியாகப் புரிந்துகொள்ளுதல். மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டுமென்றும் கொள்ளலாம். I cannot comprehend your reasons for joining this company. சில சமயம் இன்னின்ன சேர்த்துக் கொள்ளப்படுகின்றன என்ற அர்த்தத்திலும் comprehend பயன்படுத்தப்படுகிறது comprise என்கிறோமே அப்படி. An order comprehending all employees.

Comprehensive என்றால் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியது என்று அர்த்தம். From a comprehensive list of 1,500 applicants, 300 were selected for interview.

Comprehensive Insurance Policy என்ற ஒன்றை வண்டிக்கான காப்பீடு தொடர்பாகச் சொல்வதுண்டு. அப்படிப்பட்ட ஒரு பாலிசி அந்த வண்டி தொடர்பான (கிட்டத்தட்ட) எல்லா பாதிப்புகளையுமே ஈடு செய்யும் என்று அர்த்தம்.

மிக அதிகமான வித்தியாசத்தில் ஒன்றைச் சாதிக்கும்போதோ ஒன்றில் தோல்வியடையும்போதோகூட comprehensive என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். A comprehensive victory for India in the cricket match என்றால் அது மிக அதிக ரன் வித்தியாசத்தில் (அல்லது மிக அதிக விக்கெட்டுகளை இழக்காமல்) இந்தியா வெற்றி பெற்ற போட்டியைக் குறிக்கிறது.

தேர்வுகளில் comprehension என்று ஒரு பகுதி உண்டு. ஒரு சிறு கட்டுரையையோ பாராவையோ கொடுத்துவிட்டு அதிலிருந்து சில கேள்விகளைக் கேட்பார்கள். ஆக Comprehensive exercise என்பது நம் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிப்பது. Comprehension என்பது ஒன்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதாவது சும்மா வார்த்தைகளை மட்டும் படிக்காமல் அவை உணர்த்துவது என்ன என்பதையும் புரிந்துகொள்ளும் திறன்.

எடுத்துக்காட்டாக ஒரு பத்தி இப்படி இருக்கலாம்.

முனுசாமியைப் பார்த்து “நல்லா இருக்குது உன் நியாயம்!’’ என்றான் ஏழுமலை. முனுசாமி எதுவும் விளங்காமல் இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் நின்று கொண்டிருந்தான்.

மேற்படி பாராவுக்குக் கீழ் கேள்விகள் இப்படிக் கேட்கப்படலாம்.

1) முனுசாமி மீது ஏழுமலை வெளிப்படுத்துவது என்ன?

அ) பாராட்டு ஆ) கோபம்

2) இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா என்றால் அது எதை வெளிப்படுத்துகிறது?

அ) பூனைக்கு வயிறு நிறைந்துவிட்டது

ஆ) அப்பாவி போன்ற வெளித் தோற்றம்

இரண்டு கேள்விகளுக்கும் நீங்கள் (ஆ) என்ற பதிலைத்தானே தேர்ந்தெடுப்பீர்கள். அப்படி என்றால் நீங்கள் அந்தப் பாராவில் உள்ள விவரத்தை comprehend செய்துகொண்டு Comprehension Exercise- ல் முழு மதிப்பெண் பெற்றுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

ஆங்கிலம் அறிவோமே - 91: இப்படியும் சொல்லலாமே? Published : 05 Jan 2016 10:38 IST Updated : 12 Jan 2016 10:34 IST ஜி.எஸ்.சுப்ரமணியன் 4 - + SUBSCRIBE TO THE HINDU TAMIL YouTube “பல கல்லூரி விழாக்களின் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் potpourri என்று ஒரு பிரிவு இருக்கிறது. Potpourri என்றால் என்ன?” இது ஒரு நண்பரின் கேள்வி. மிக்ஸர், கதம்பம், அவியல் என்றெல்லாம் சொன்னால் அவற்றின் பொதுவான அம்சம் என்ன? அதேதான் potpourri (பாட்புவரி இதில் ‘ட்’ என்பதை மிக மெலிதாக உச்சரிக்க வேண்டும்) என்பதும். பல்வேறு உலர்ந்த பூ இதழ்களையும், சிலவகை மசாலாப் பொருள்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அறையின் மூலையில் வைப்பார்கள். அந்த அறை வாசனையுடன் இருக்கும். இந்தக் கிண்ணத்தில் இருக்கும் பொருட்களைத்தான் potpourri என்பார்கள். Potpourri என்பதை ஒருவிதத்தில் medley என்றும் சொல்லலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நீச்சலின் ஒருவகை போட்டிப் பிரிவு. Free style, butterfly, breast stroke, back stroke என்று நான்குவகை நீச்சல் பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்தில் கை, கால்களை இயக்க வேண்டும். (Free style- லில் மட்டும் எப்படி வேண்டுமானாலும் நீச்சல் அடிக்கலாம்). ஒரு போட்டியில் நான்கு முறை நீச்சல் குளத்தைக் கடக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதப் பிரிவின்படி நீச்சலடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது medley. DUAL - DUEL - DUET Dual என்றால் இரண்டு பகுதிகள் கொண்ட அல்லது இரட்டை என்று அர்த்தம். Dual language texts. He played a dual role in the movie. Duel என்றால் சண்டை அல்லது போர். The argument turned a duel. Should we duel over this? Duet நமக்குத் தெரிந்ததுதான். என்றாலும் duet என்பது இருவர் சேர்ந்து பாடும் பாடல் மட்டுமே என்று நினைக்கக் கூடாது. இருவரின் எந்தவித கலை நிகழ்ச்சியையும் (இருவர் ஆடும் நடனம், இருவரின் வயலின் இசை போன்றவை உட்பட) duet-தான். Dual controls என்றால் ஒரே சமயத்தில் இருவர் ஒன்றைக் கட்டுப்படுத்துதல் என்று அர்த்தம். “Please revert to me”. “As soon as I receive the information, I shall revert back to you’’ என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள். அதாவது reply என்பதற்குப் பதிலாக revert என்பதைப் பயன்படுத்துகிறார்கள். இது சரியல்ல. Revert என்றால் முந்தைய நிலைக்கு மாறுவது என்று அர்த்தம். நீர் பனிக்கட்டி ஆவதைப் போல. நீராவி தண்ணீர் ஆவதைப் போல. “Revert to me’’ என்று நீங்கள் குறிப்பிட்டால், யாருக்கு அந்தக் கடிதத்தை எழுதுகிறீர்களோ அவர்களை நீங்களாக மாறச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்! “Old people like you should be respected’’ என்று ஒரு பெரியவரிடம் கூறினேன். அவர் கொஞ்சம் கோபமாக என்னைப் பார்த்தார். ‘Old’ என்று அவரைக் குறிப்பிட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. முதியவர்களை Old people என்று குறிப்பிடாமல் வேறு எப்படிக் குறிப்பிடுவது?’’ என்கிறார் ஒருவர். ஏன், Elderly people என்று குறிப்பிடலாமே. Senior people என்று குறிப்பிடலாமே? நாம் சொல்வது தவறல்ல என்பது ஒருபுறம் இருந்தாலும், அது யாரையும் புண்படுத்தும்படியும் இருக்கக் கூடாது. 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை அறிமுகம் செய்து வைத்தால் “உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள்?’’ என்று பட்டென்று கேட்டுவிடக் கூடாது. அவர் திருமணமாகாதவராகவோ, குழந்தைப் பேறு இல்லாதவராகவோ இருக்கக்கூடும். சில நயத்தகு நாகரிகப் பயன்பாடுகளைப் பார்ப்போம். அவர் மிகவும் nosey என்று கூற நினைக்கிறீர்கள். அதாவது எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பவர். அதற்குப் பதிலாக அவர் மிகவும் curious எனலாம். My brother is fat என்று அறிவிக்க உங்கள் பாசம் தடைபோடுமானால், My brother is well built என்று கூறுங்கள். My neighbour always spends time gossiping with friends என்கிறீர்களா? Gossiping என்பதற்குப் பதிலாக chattering எனலாம். சிலர் yes என்பதற்குப் பதிலாக yep, yeah என்ற வார்த்தைகளைக் கூறுகிறார்கள். வேறு சிலர் no என்பதற்குப் பதிலாக nope என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வேண்டாமே. இவை அநாகரிகமாகக் கருதப்பட வாய்ப்பு உண்டு. It is nice that you have bought a cheap second hand car என்பது உங்களின் உளமார்ந்த பாராட்டாக இருக்கலாம். என்றாலும் cheap என்ற வார்த்தைக்குப் பதிலாக inexpensive என்ற வார்த்தை மேலானது. “என் மகனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று ஒருவர் கேட்கிறார். “Arrogant’’ என்ற வார்த்தைதான் உங்கள் நாக்கு நுனியில் வந்து நிற்கிறது. அதைப் பின்னுக்குத் தள்ளுங்கள். “Opinionated” என்ற வார்த்தையை வெளிப்படுத்துங்கள். “உன் அண்ணன் ஆனாலும் cowardly’’ என்று உங்கள் மனைவியிடம் கூறுவது புத்திசாலித்தனமா? “உன் அண்ணன் ஆனாலும் shy type’’ என்று கூறுங்கள். யாராவது thanks என்று சொன்னால் மிகவும் பெருந்தன்மையாகக் கூறுவதாக நினைத்துக்கொண்டு “No problem’’ என்ற வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். பிரச்சினை இருப்பதாக யார் சொன்னது? “Pleasure is mine’’ எனலாமே. One day என்றால் உங்கள் மனதில் என்ன ஓடும்? 24 மணி நேரம் என்றுதானே! Day & night என்றால்? Day என்பதை 12 மணி நேரம் என்று நினைப்பீர்கள். அப்படியானால் தொடர்ந்து 24 மணி நேரம் என்பதைக் குறிக்க day என்ற வார்த்தை சரியில்லையோ? எதற்கு சந்தேகம்? ஆங்கிலத்தில் 24 மணி நேரத்தைக் குறிக்க ஒரு வார்த்தை இருக்கிறது (அது இவ்வளவு கரடுமுரடாக இருந்திருக்க வேண்டாம். எல்லாம் கிரேக்க மொழியால் வந்தது.) அந்த ஆங்கில வார்த்தை Nychthemeron. கிரேக்க மொழியில் nykt என்றால் night. Hemera என்றால் பகல். Nychthemeron என்ற வார்த்தையைப் பார்க்கும்போதே அது வாயில் புண் உள்ளவர்கள் உச்சரிக்கக் கூடாத வார்த்தை என்று தோன்றக்கூடும்! அதை நிச்திமரான் என்று உச்சரிக்க வேண்டும். வணிகத்தில் 24/7 என்றால் எல்லா நாட்களிலும், எந்த நேரத்திலும் என்று அர்த்தம் (ஏழு நாட்கள், 24 மணி நேரம்). இன்னும் சில பேர் தங்கள் இடைவிடாத சேவையைக் குறிக்க 24/7/365 என்று குறிக்கிறார்கள். (லீப் வருடமாக இருந்தால் ஒரு நாள் விடுப்பெடுத்துக் கொள்வார்களோ என்னவோ!.) Round-the-clock service என்பதன் பொருளும் 24/7தான். (சில நிறுவனங்கள் இப்படித் தொடர்ந்து வேலை செய்யாமலேயே 24/7 என்று அறிவித்துக்கொள்கின்றன. கேட்டால் எங்கள் வலைத்தளங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இயக்கலாம் என்கிறார்கள்). ஒவ்வொரு நாளும் எனும்போது Circadian என்று ஒரு வார்த்தையும் மனதில் தோன்றுகிறது. நமது உடலின் இயக்கங்களை our body’s circadian cycle என்பார்கள். அதாவது நமது சுற்றுப்புறம் மற்றும் பழக்கத்தின் காரணமாக நம உடலில் இயல்பாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் இயக்கம். விமானத்தில் பயணம் செய்து திரும்பும்போது நமக்கு jetlag (வித்தியாசமான நேரங்களைக் கொண்ட பகுதிகளுக்கு வெகுவேகமாகச் சென்று வருவதால் உண்டாகும் நிலை) ஏற்படுவதற்குக் காரணம் circadian disturbance. (தொடர்புக்கு: aruncharanya@gmail.com) இலவசம்! 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு Keywords ஆங்கிலம் அறிவோமே இப்படியும் சொல்லலாமே தொடர் ஆங்கில அறிவு மொழி 'தி இந்து'வில் கவனம் பெற்றவை.. Promoted Stories Recommended by This article is closed for comments. Please Email the Editor பெட்ரோல், டீசல் விலை

“பல கல்லூரி விழாக்களின் விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் potpourri என்று ஒரு பிரிவு இருக்கிறது. Potpourri என்றால் என்ன?” இது ஒரு நண்பரின் கேள்வி.

மிக்ஸர், கதம்பம், அவியல் என்றெல்லாம் சொன்னால் அவற்றின் பொதுவான அம்சம் என்ன? அதேதான் potpourri (பாட்புவரி இதில் ‘ட்’ என்பதை மிக மெலிதாக உச்சரிக்க வேண்டும்) என்பதும்.

பல்வேறு உலர்ந்த பூ இதழ்களையும், சிலவகை மசாலாப் பொருள்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அறையின் மூலையில் வைப்பார்கள். அந்த அறை வாசனையுடன் இருக்கும். இந்தக் கிண்ணத்தில் இருக்கும் பொருட்களைத்தான் potpourri என்பார்கள்.

Potpourri என்பதை ஒருவிதத்தில் medley என்றும் சொல்லலாம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு நீச்சலின் ஒருவகை போட்டிப் பிரிவு. Free style, butterfly, breast stroke, back stroke என்று நான்குவகை நீச்சல் பிரிவுகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதத்தில் கை, கால்களை இயக்க வேண்டும். (Free style- லில் மட்டும் எப்படி வேண்டுமானாலும் நீச்சல் அடிக்கலாம்). ஒரு போட்டியில் நான்கு முறை நீச்சல் குளத்தைக் கடக்க வேண்டும் என்று கூறி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதப் பிரிவின்படி நீச்சலடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டால் அது medley.

DUAL - DUEL - DUET

Dual என்றால் இரண்டு பகுதிகள் கொண்ட அல்லது இரட்டை என்று அர்த்தம். Dual language texts. He played a dual role in the movie.

Duel என்றால் சண்டை அல்லது போர். The argument turned a duel. Should we duel over this?

Duet நமக்குத் தெரிந்ததுதான். என்றாலும் duet என்பது இருவர் சேர்ந்து பாடும் பாடல் மட்டுமே என்று நினைக்கக் கூடாது. இருவரின் எந்தவித கலை நிகழ்ச்சியையும் (இருவர் ஆடும் நடனம், இருவரின் வயலின் இசை போன்றவை உட்பட) duet-தான்.

Dual controls என்றால் ஒரே சமயத்தில் இருவர் ஒன்றைக் கட்டுப்படுத்துதல் என்று அர்த்தம்.

“Please revert to me”. “As soon as I receive the information, I shall revert back to you’’ என்றெல்லாம் சிலர் எழுதுகிறார்கள். அதாவது reply என்பதற்குப் பதிலாக revert என்பதைப் பயன்படுத்துகிறார்கள்.

இது சரியல்ல. Revert என்றால் முந்தைய நிலைக்கு மாறுவது என்று அர்த்தம். நீர் பனிக்கட்டி ஆவதைப் போல. நீராவி தண்ணீர் ஆவதைப் போல.

“Revert to me’’ என்று நீங்கள் குறிப்பிட்டால், யாருக்கு அந்தக் கடிதத்தை எழுதுகிறீர்களோ அவர்களை நீங்களாக மாறச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம்!

“Old people like you should be respected’’ என்று ஒரு பெரியவரிடம் கூறினேன். அவர் கொஞ்சம் கோபமாக என்னைப் பார்த்தார். ‘Old’ என்று அவரைக் குறிப்பிட்டது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது புரிந்தது. முதியவர்களை Old people என்று குறிப்பிடாமல் வேறு எப்படிக் குறிப்பிடுவது?’’ என்கிறார் ஒருவர்.

ஏன், Elderly people என்று குறிப்பிடலாமே. Senior people என்று குறிப்பிடலாமே?

நாம் சொல்வது தவறல்ல என்பது ஒருபுறம் இருந்தாலும், அது யாரையும் புண்படுத்தும்படியும் இருக்கக் கூடாது. 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை அறிமுகம் செய்து வைத்தால் “உங்களுக்கு எவ்வளவு குழந்தைகள்?’’ என்று பட்டென்று கேட்டுவிடக் கூடாது. அவர் திருமணமாகாதவராகவோ, குழந்தைப் பேறு இல்லாதவராகவோ இருக்கக்கூடும்.

சில நயத்தகு நாகரிகப் பயன்பாடுகளைப் பார்ப்போம்.

அவர் மிகவும் nosey என்று கூற நினைக்கிறீர்கள். அதாவது எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பவர். அதற்குப் பதிலாக அவர் மிகவும் curious எனலாம்.

My brother is fat என்று அறிவிக்க உங்கள் பாசம் தடைபோடுமானால், My brother is well built என்று கூறுங்கள்.

My neighbour always spends time gossiping with friends என்கிறீர்களா? Gossiping என்பதற்குப் பதிலாக chattering எனலாம்.

சிலர் yes என்பதற்குப் பதிலாக yep, yeah என்ற வார்த்தைகளைக் கூறுகிறார்கள். வேறு சிலர் no என்பதற்குப் பதிலாக nope என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். வேண்டாமே. இவை அநாகரிகமாகக் கருதப்பட வாய்ப்பு உண்டு.

It is nice that you have bought a cheap second hand car என்பது உங்களின் உளமார்ந்த பாராட்டாக இருக்கலாம். என்றாலும் cheap என்ற வார்த்தைக்குப் பதிலாக inexpensive என்ற வார்த்தை மேலானது.

“என் மகனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று ஒருவர் கேட்கிறார். “Arrogant’’ என்ற வார்த்தைதான் உங்கள் நாக்கு நுனியில் வந்து நிற்கிறது. அதைப் பின்னுக்குத் தள்ளுங்கள். “Opinionated” என்ற வார்த்தையை வெளிப்படுத்துங்கள்.

“உன் அண்ணன் ஆனாலும் cowardly’’ என்று உங்கள் மனைவியிடம் கூறுவது புத்திசாலித்தனமா? “உன் அண்ணன் ஆனாலும் shy type’’ என்று கூறுங்கள்.

யாராவது thanks என்று சொன்னால் மிகவும் பெருந்தன்மையாகக் கூறுவதாக நினைத்துக்கொண்டு “No problem’’ என்ற வார்த்தைகளை உதிர்க்காதீர்கள். பிரச்சினை இருப்பதாக யார் சொன்னது? “Pleasure is mine’’ எனலாமே.

One day என்றால் உங்கள் மனதில் என்ன ஓடும்? 24 மணி நேரம் என்றுதானே!

Day & night என்றால்? Day என்பதை 12 மணி நேரம் என்று நினைப்பீர்கள்.

அப்படியானால் தொடர்ந்து 24 மணி நேரம் என்பதைக் குறிக்க day என்ற வார்த்தை சரியில்லையோ? எதற்கு சந்தேகம்? ஆங்கிலத்தில் 24 மணி நேரத்தைக் குறிக்க ஒரு வார்த்தை இருக்கிறது (அது இவ்வளவு கரடுமுரடாக இருந்திருக்க வேண்டாம். எல்லாம் கிரேக்க மொழியால் வந்தது.) அந்த ஆங்கில வார்த்தை Nychthemeron. கிரேக்க மொழியில் nykt என்றால் night. Hemera என்றால் பகல். Nychthemeron என்ற வார்த்தையைப் பார்க்கும்போதே அது வாயில் புண் உள்ளவர்கள் உச்சரிக்கக் கூடாத வார்த்தை என்று தோன்றக்கூடும்! அதை நிச்திமரான் என்று உச்சரிக்க வேண்டும்.

வணிகத்தில் 24/7 என்றால் எல்லா நாட்களிலும், எந்த நேரத்திலும் என்று அர்த்தம் (ஏழு நாட்கள், 24 மணி நேரம்). இன்னும் சில பேர் தங்கள் இடைவிடாத சேவையைக் குறிக்க 24/7/365 என்று குறிக்கிறார்கள். (லீப் வருடமாக இருந்தால் ஒரு நாள் விடுப்பெடுத்துக் கொள்வார்களோ என்னவோ!.)

Round-the-clock service என்பதன் பொருளும் 24/7தான். (சில நிறுவனங்கள் இப்படித் தொடர்ந்து வேலை செய்யாமலேயே 24/7 என்று அறிவித்துக்கொள்கின்றன. கேட்டால் எங்கள் வலைத்தளங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், இயக்கலாம் என்கிறார்கள்).

ஒவ்வொரு நாளும் எனும்போது Circadian என்று ஒரு வார்த்தையும் மனதில் தோன்றுகிறது. நமது உடலின் இயக்கங்களை our body’s circadian cycle என்பார்கள். அதாவது நமது சுற்றுப்புறம் மற்றும் பழக்கத்தின் காரணமாக நம உடலில் இயல்பாக ஒவ்வொரு நாளும் நடைபெறும் இயக்கம். விமானத்தில் பயணம் செய்து திரும்பும்போது நமக்கு jetlag (வித்தியாசமான நேரங்களைக் கொண்ட பகுதிகளுக்கு வெகுவேகமாகச் சென்று வருவதால் உண்டாகும் நிலை) ஏற்படுவதற்குக் காரணம் circadian disturbance.

ஆங்கிலம் அறிவோமே - 90: படாபேஜாரும் மொக்க ஜோக்கும்

ஒரு வாசகர் Trilogy என்ற வார்த்தையின் பொருளை விளக்கக் கோரியிருக்கிறார். Tri என்றால் மூன்று. Triangle = முக்கோணம். Trident = திரிசூலம்.
கதைப் போக்கில் தொடர்புள்ள மூன்று படைப்புகளை trilogy என்று கூறுவதுண்டு. எழுத்தாளர் ஜெயகாந்தன் அக்னிப் பிரவேசம் என்று ஒரு கதை எழுதினார். அதில் கங்கா என்ற பாத்திரம்தான் கதாநாயகி. அந்தப் பாத்திரத்துக்குப் பிறகு நேர்ந்த கதியை ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற தொடர்கதையில் விளக்கினார். அதற்குப் பிறகு கங்காவின் வாழ்க்கை என்னவானது என்பதை “கங்கை எங்கே போகிறாள்?’’ என்று எழுதினார். இந்த மூன்று கதைகளையும் trilogy எனலாம். அதேபோல் அப்பு என்ற ஒரு கதாபாத்திரத்தை மையமாக வைத்து சத்யஜித்ராய் மூன்று திரைப்படங்களை trilogy ஆகப் படைத்திருக்கிறார்.
(Trio என்றால் set of three. Trioxide, triode. ஆனால் ஏனோ trilogy என்பதில் tri என்ற எழுத்துகளுக்குப் பிறகு o இல்லை).

Trilogy குறித்துக் கேட்டிருந்த வாசகரே prequel குறித்தும் விளக்கக் கோரியிருக்கிறார்.
Sequel என்பது ஏற்கெனவே கூறப்பட்ட ஒரு படைப்பின் தொடர்ச்சி. Prequel என்பது ஏற்கெனவே கூறப்பட்ட கதைக்கு முன்னதாக நிகழ்ந்தவை. பாகுபலி இரண்டாம் பாகம் என்பது (இரண்டாவதாக வெளிவருவதால்) sequel போலத் தோன்றினாலும் அது prequelதான். ஏனென்றால் மகனின் வாழ்க்கையை முதல் பகுதியும், தந்தையின் வாழ்க்கையை இரண்டாவது பகுதியும் கையாள் கின்றன.
ஒரு நண்பர் வீட்டுக்குப் போனபோது அவர் வீட்டுக் கூடத்தின் ட்யூப்லைட் எரியவில்லை. “நேத்துதான் புதுசா வாங்கிப் போட்டேன். ஆனால் deficient ஆன tube light ஆப் போயிடுச்சு’’ என்றார்.
யாருமே பேசும்போது ஓரிரு வார்த்தைகளில் தவறுவதுண்டுதான். ஆனால் defective என்பதறகும் deficient என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வது நல்லது.
Defective என்றால் கோளாறு உள்ள என்று அர்த்தம். Deficient என்றால் போதிய அளவு இல்லை என்ற அர்த்தம்.
The television set is defective. His English knowledge is deficient.
Our education system is defective. His daily intake is deficient.
Television என்ற வார்த்தைக்கான அடிப்படை கிரேக்க மொழியா அல்லது லத்தீன் மொழியா என்று கேட்டிருக்கிறார் ஒருவர். இரண்டும்தான்! கிரேக்க மொழியில் Tele என்றால் தொலைவில் என்று அர்த்தம். லத்தீன் மொழியில் visio என்றால் காட்சி என்று அர்த்தம்.
இந்த வகை வார்த்தைகளை hybrid words என்பார்கள். இதுபோன்ற வார்த்தையின் ஒரு பகுதி ஒரு மொழியிலிருந்தும், மறுபகுதி வேறொரு மொழியிலிருந்தும் உருவானதாக இருக்கும். அப்படிப்பட்ட சில hybrid வார்த்தைகளைப் பார்ப்போமே.
Aquaphobia என்றால் தண்ணீரைப் பார்த்து பயம் என்று அர்த்தம். தண்ணீர் என்பதைக் குறிக்கும் லத்தீன் வார்த்தை ‘aqua’. பயம் என்பதைக் குறிக்கும் phobia என்ற வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது.
Genocide என்றால் இனப்படுகொலை. கிரேக்க மொழியில் genos என்றால் ‘இனம் அல்லது மக்கள்’. லத்தீன் மொழியில் cidire என்றால் கொல்வது என்று பொருள்.
Hyperactive என்றால் அளவுக்கு அதிகமாகச் செயல்படும் தன்மை என்று அர்த்தம். கிரேக்க மொழியில் hyper என்றால் ‘அதிகப்படியாக’ என்றும் லத்தீன் மொழியில் activus என்றால் ‘செயல்படு’ என்றும் பொருள்.
Liposuction என்றால் கொழுப்பை (கருவி மூலம் உறிஞ்சி) நீக்குதல் என்று அர்த்தம். கிரேக்க மொழியில் Lipos என்றால் கொழுப்பு. லத்தீன் மொழியில் suction என்றால் ‘உறிஞ்சுதல்’.
ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் renumeration என்று ஒரு வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். Remuneration என்பதற்குப் பதிலாக இப்படிக் குறிப்பிட்டிருக்கிறார். Remuneration என்றால் செய்த வேலைக்காக அளிக்கப்படும் ஊதியம்.
Renumeration என்பதை ஒரு வார்த்தையாகவே அகராதிகள் கண்டுகொள்வதில்லை. என்றாலும் மீண்டும் எண்ணிப் பார்ப்பது என்ற அர்த்தத்தில் (அதாவது counting again) அதைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறார்கள்.
Enumeration என்றும் ஒரு வார்த்தை உண்டு. பல விஷயங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் குறிப்பிடுவதை இப்படிச் சொல்வார்கள்.
டைகோனாட் என்பவர் யார் என்று ஒரு வாசகர் கேட்டிருந்தார். இதுகூட இந்தப் பகுதியில் குறிப்பிட்டிருக்கும் hybrid வார்த்தைகளோடு தொடர்பு கொண்டதுதான். Astronaut (ஆஸ்ட்ரொனட்) என்று அமெரிக்க விண்வெளி வீரரைக் குறிப்பிடுவார்கள். ரஷ்ய வீரரை Cosmonaut என்பார்கள். சீன விண்வெளி வீரரை Taikonaut (டைகோனாட்) என்பார்கள். சீன மொழியில் Taikong என்றால் விண்வெளி. கிரேக்க மொழியில் Nautes என்றால் கப்பலில் பணிபுரிபவர் அல்லது கப்பல் பயணி என்று அர்த்தம்.
முன்பு ஒரு பகுதியில் collective nouns பற்றிக் குறிப்பிட்டோம். அது தொடர்பாக இன்னொரு சந்தேகமும் எழுப்பப்பட்டிருக்கிறது.
Couple என்பதற்கு singular verb-ஐப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது plural-ஐப் பயன்படுத்த வேண்டுமா?
Couple என்றால் ஜோடி என்று அர்த்தம். பயன்பாட்டைப் பொருத்து அது singular-ஆகவோ, plural-ஆகவோ கொள்ளப்படுகிறது. The couple is participating in the contest.
The couple are going separately to different destinations.
போதாக்குறைக்கு அமெரிக்க-பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் இதை வேறு மாதிரி அணுகுவதும் குழப்பத்தை அதிகரிக்கிறது. அமெரிக்கர்கள் ‘‘The faculty is meeting today’’ என்று சொல்வார்கள். ஆனால் பிரிட்டனில் பெரும்பாலும் ‘‘The faculty are meeting today’’ என்றுதான் சொல்வார்கள்.
இந்த இடத்தில் faculty என்பது என்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.
இவற்றில் எது சரியானது என்று சொல்லுங்கள்.
(1) அந்தக் கல்லூரியில் Marine Engineering என்கிற faculty கிடையாது.
(2) இவர்தான் எங்களுக்கு Civil Engineering நடத்துகிற faculty.
The faculty of Computer Engineering, The faculty of Arts என்றெல்லாம் குறிக்கும்போது ஒரு துறையையோ, துறைகளின் இணைப்பையோ குறிக்கிறோம். அந்தப் பாடத்தை நடத்துபவரை faculty என்று சொல்லக் கூடாது. Member of Computer Engineering faculty என்பது போலக் குறிப்பிடலாம்.
மீண்டும் collective noun-க்கு வருவோம். ஒர் அமைப்பின் பெயர் collective noun-ஆகப் பயன்படுத்தப்பட்டால் (The Legislative Assembly, The United States என்பதுபோல) அதற்கு singular verb-ஐத்தான் பயன்படுத்துகிறோம். ‘‘The Legislative Assembly is meeting today’’ என்பது சரி. அதன் உறுப்பினர்கள் சந்திக்கிறார்கள் எனும்படிதான் இருக்கவேண்டுமென்றால் The Legislative Assembly are meeting today என்பதைவிட “The Members of Legislative Assembly are meeting today’’ என்று கூறிவிடலாமே.
My furniture is very old என்றுதான் சொல்ல வேண்டும் - பலவித furniture item-களை நீங்கள் குறிப்பிட்டால்கூட. அப்படிச் சொல்ல ஏனோ மனம் ஒப்பவில்லையென்றால் “My pieces of furniture are very old’’ என்று குறிப்பிடலாமே.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
ஓவியம்: வெங்கி
தவறவிடாதீர்

ஆங்கிலம் அறிவோமே - 89: மிதக்கும் நகரம் எது?

ஒரு வாசகர் “மதுவிலக்கு தொடர்பான செய்திகளில் sober என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். Sober என்றால் என்ன?’’ என்றுள்ளார்.
Sober என்றால் சீரியசாக இருப்பது என்று பொருள். மதுவின் ஆதிக்கம் இல்லாமை என்ற அர்த்தத்திலும் இதைப் பயன்படுத்துகிறார்கள். Sober colour என்றால் பளிச்சென்று இல்லாத மென்மையான வண்ணம் எனலாம். Sober என்பதை ஸோபெர் என்று உச்சரிக்க வேண்டும்.
போக்குவரத்துக் காவலர்கள், வாகனங்களை நிறுத்தி வாகன ஓட்டிகளை ‘ஊத’ வைத்து அவர்கள் மது அருந்தியிருக்கிறார்களா என்பதை ஒரு கருவியின் மூலம் கண்டுபிடிக்கச் செய்யும் சோதனையை Sobriety test என்பார்கள்.
இதைக் குறிப்பிடும்போது Sobriquet என்ற வார்த்தை குறித்தும் விளக்கத் தோன்றுகிறது. இந்த வார்த்தைக்கு செல்லப் பெயர் அல்லது காரணப் பெயர் என்று அர்த்தம் கொள்ளலாம். அதாவது அதிகாரபூர்வமான பெயர் அல்ல. ஆனால் இதைக் குறிப்பிட்டாலே பெரிய விளக்கம் தேவைப்படாமல் மக்கள் புரிந்து கொள்வார்கள். ‘‘கர்மவீரர் யார்?’’ என்றால் “காமராஜர்” என்பார்கள். ‘‘நைல் நதியின் கொடை எது?’’ என்று கேட்டால் “எகிப்து” என்பார்கள். ‘‘உலகின் சர்க்கரைக் கிண்ணம் எது?’ என்றால் “கியூபா” என்பார்கள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளைக்கு ‘‘மிதக்கும் நகரம் எது?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘வெனிஸ்’’ என்ற பதிலை தமிழகத்தின் தலைநகரவாசியிடம் எதிர்பார்க்காதீர்கள்.
Pseudonym என்பதற்கும் Sobriquet என்பதற்கும் ஒரு முக்கிய வித்தியாசம் உண்டு. Pseudonym நாமே வைத்துக் கொள்வது. தனது அடையாளம் வெளியே தெரிய வேண்டாம் எனும் காரணத்துக்காகக்கூட Pseudonym வைத்துக் கொள்பவர்கள் உண்டு. (Pseudo என்றால் பொய். nym என்பது name என்பதன் திரிபு). Sobriquet என்பது. பிறர் வைக்கும் பெயர். Nickname எனப்படுவதும் இதுதான்.
EXPECT HOPE LOOK FORWARD
‘Expect’ என்ற வார்த்தையும் ‘Look forward to’ என்ற வார்த்தையும் ஒரே பொருள் கொண்டவையா என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகசர். ‘Hope’ என்ற வார்த்தைகூட இந்த இரண்டுடன் சேர்த்து சிறிது குழப்பத்தைத் தரக்கூடியது என்பதால், மூன்றைப் பற்றியுமே அறிந்து கொள்வோமே!
I hope I get admission in that college.
I hope our baby is a girl.
Let us hope for the best.
இந்த வாக்கியங்களைப் படிக்கும்போது ‘hope’ என்பதன் பொருள் தெளிவாக விளங்கிறதல்லவா?. அதாவது ஒன்று நடைபெற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். ஆனால் அது நடக்கும் அல்லது நடக்காமலும் போகலாம்.
Expect என்ற வார்த்தையின் பயன்பாடு வேறுமாதிரி. Indian team is expected to win this match because it has practised well. நீங்கள் ஏதோ ஒன்று நடக்கும் என்று நினைக்கிறீர்கள். அதே சமயம் அது நடைபெற வேண்டும் என்பது உங்கள் ஆசை என்பதில்லை. The case is expected to last two years.
I hope to meet you next week in Chennai என்பதற்கும் I expect to meet you next week in Chennai என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர முடிகிறதா?
Looking forward to என்பதன் பயன்பாடு வேறுமாதிரி. He is looking forward to inheriting his father’s property. I am looking forward to your eighteenth birthday.
நடந்தாலும் நடக்கும் என்பது போன்ற நிகழ்வுகளைக் குறிக்கும்போது ‘I look forward to’ என்பதைப் பயன்படுத்துவதில்லை. நிச்சயம் நடக்கப்போகிறது. அதற்காக நீங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது I look forward.
India is playing against South Africa today. I HOPE India can manage a victory. But South Africa is a stronger team; so I EXPECT its victory. Anyhow I am ‘LOOKING FORWARD’ to watch the game.
அதாவது
Hope - இப்படி நடந்தால் நன்றாக இருக்கும்
Expect - இப்படி நடக்கும் என்ற எதிர்பார்ப்பு (பிடிக்கிறதோ இல்லையோ)
Look forward to - இப்படி நிச்சயம் நடக்கப்போகிறது. அதற்காக நான் காத்துக்கொண்டிருக்கிறேன்.
“Atheist, Heretic ஆகிய இருவரில் சமூகத்துக்கு அதிகம் ஊறு விளைவிப்பவர் யார்?’’ இப்படி ஒரு கேள்வி வந்திருக்கிறது. ‘ஊறு’ என்பது அவர் செயல்படும் விதம் மற்றும் பார்ப்பவர் கண்ணோட்டத்தைப் பொருத்தது. மற்றபடி இந்த வார்த்தைகளின் அர்த்தங்களை அறிந்துகொள்வோம். Atheist என்பவர் நாத்திகர். கடவுளை நம்பாதவர். Heretic என்பவரும் அப்படித்தான். “ஊருக்கெல்லாம் ஒரு வழி என்றால் இவருக்குத் தனி வழி’’ என்பார்களே அப்படிப்பட்டவர்களைக் கூட heretic என்று அழைப்பதுண்டு. மதங்களுக்கு எதிராகச் செயல்படுபவரையும் heretic என்பார்கள்.
Iconoclast எனப்படுபவர் மேலும் ஒரு படி அதிகம். (தெய்வ) உருவங்களை உடைத்துத் தள்ளுபவர். (விக்ரக விநாசகர் என்று சொல்லலாம்)
VERACITY VORACITY
VERACITY என்பது துல்லியம். அதாவது உண்மையான, ஆதாரமான தகவல்களுக்கு பொருத்தமாக இருப்பது. Conformity to facts, accuracy:
He expressed doubts concerning the veracity of the story.
A veracious account என்றால் தில்லுமுல்லு இல்லாத கணக்கு என்று பொருள் கொள்ளலாம்.
VORACITY என்பது பேராசை அல்லது பெருவெறி.
Exposure to more and more oxygen increases the voracity of fire.
எனினும் இந்த வார்த்தையை எக்கச்சக்கமான உணவை உட்கொள்வதையோ அப்படிப்பட்ட வெறி கொண்டிருப்பதையோ குறிக்கும் வகையில்தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
Voracious என்பதை நுட்பமாகவும் பயன்படுத்துவது உண்டு. She is a voracious reader என்றால் அவள் படிப்பதில் பேரார்வம் கொண்டவள் என்று அர்த்தம். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவள் என்று அர்த்தம்.

ஆங்கிலம் அறிவோமே - 88: விடுதலையா, உடல் மெலிவா?

பரிசோதனைக்கு ரத்தம் கொடுத்துவிட்டு வந்த கையோடு ஒரு நண்பருக்குப் பெரும் குழப்பம் உண்டானது.
காரணம் இதுதான். “ரத்தப் பரிசோதனையின் ரிசல்ட் தெரிய இரண்டு நாளாகும். ஏன்னா culture செய்யணும்” என்று பரிசோதனைச் சாலையில் கூறிவிட்டார்களாம். DNA test போல பண்பாடு குறித்தும் ரத்தச் சோதனையின் மூலம் அறிந்துகொள்ள முடியுமா?
இது வேறு culture என்று எடுத்துரைத்தேன். Culture என்றால் பண்பாடு மட்டுமல்ல, பாக்டீரியாவின் எண்ணிக்கையைப் பெருக வைப்பதையும் அது குறிக்கிறது. சில வகை பாக்டீரியா மிக மிகச் சிறியவை. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட அதிகமாக அவை இருந்தால் மட்டுமே அவற்றை நுண்நோக்கியில் பார்க்க முடியும். ரத்தத்தில் உள்ள பாக்டீரியா அந்த அளவுக்குப் பெருகச் சில நாட்கள் ஆகலாம். எனவே, ரத்தத்தை culture செய்வார்கள். அதாவது, ஒரு செயற்கையான ஊடகத்தில் பாக்டீரியாவை வேறு ரசாயனப் பொருள்களின் மூலம் பல்கிப் பெருக வைப்பார்கள். அதைக் கொண்டு அந்த பாக்டீரியாவின் இருப்பை உறுதி செய்துகொள்வார்கள்.
பாக்டீரியா கூட்டத்தைக் குறிக்கவும் culture என்ற வார்த்தையைச் சிலர் பயன்படுத்துகிறார்கள்.
வேறு சில உயிரினங்களின் கூட்டத்தை எப்படி அழைக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளலாமா?
Ambush என்பது புலிகள் கூட்டத்தைக் குறிக்கிறது. அதே சமயம் ambush என்பது மறைந்திருந்து எதிர்பாராத தருணத்தில் தாக்குவதையும் குறிக்கிறது. Eight soldiers were killed in an ambush. Ambush என்பது verb-ஆகவும் பயன்படுகிறது. They were ambushed.
Pandemonium என்றால் களேபரம் என்று அர்த்தம். (களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்ட காலம் இருண்ட காலம். இதிலிருந்து வந்த வார்த்தைதான் களேபரம் என்றார் எனது தமிழ் ஆசிரியர்). அதாவது கூச்சலும் குழப்பமும் நிறைந்த நிலை. அதே சமயம் கிளிகள் கூட்டத்தையும் pandemonium என்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது இல்லையா?
விளாசி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சவுக்கை scourge என்பார்கள். மிகுந்த இன்னல்களைக் கொடுக்கும் ஒருவரையோ ஒன்றையோ scourge என்று கூறுவதுண்டு. The scourge of mass unemployment.
அதே சமயம் ஒரு குறிப்பிட்ட உயிரினத்தின் கூட்டத்தையும் scourge என்று குறிப்பிடுவார்கள். அது எது தெரியுமா? நம் அனைவரையும் நடுநடுங்க வைக்கும் உயிரினம் அது.
Congress என்பது ஒரு தேசியக் கட்சி என்பது நமக்குத் தெரியும். அமெரிக்க நாடாளுமன்றத்தைக் கூட congress என்பார்கள். The new tax structure requires approval of congress. கருத்தரங்கு, பயிலகம் போன்ற கூட்டங்களையும் congress என்பதுண்டு. International Congress of Scientists. அதேசமயம் Baboon எனப்படும் ஒருவகை வாலறுந்த குரங்குகளின் கூட்டத்தையும் congress என்கின்றனர்.
வேறு சில விலங்குகள் கூட்டம் அழைக்கப்படும் விதமும் சுவையாக இருக்கிறது.
சிங்கக் கூட்டம் - Pride
சிட்டுக் குருவிகள் கூட்டம் - Host
எலிகள் கூட்டம் - Mischief
மீன்கள் கூட்டம் - School
யானைகளின் கூட்டம் - Parade
ஒட்டகச் சிவிங்கிகளின் கூட்டம் Tower
காக்கைகளின் கூட்டம் - Murder
(இவற்றில் சில வார்த்தைகளை வேறு சில விலங்குகளின் கூட்டத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகிறார்கள்).
 ஒரு scourge உங்களை நோக்கிப் படையெடுத்தால் என்ன செய்வீர்கள்? பயந்து ஓடுவீர்களா? வேண்டாம். உங்கள் பகுதியில் கொசு மருந்தைத் தெளியுங்கள். அல்லது கொசு ராக்கெட்டைக் கையில் எடுங்கள்.
“Agony என்றால் தெரியும், Aunt என்றால் தெரியும். ஆனால், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் Agony Aunt என்று குறிப்பிட்டிருக்கிறார்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்கிறார் ஒரு வாசகர். .
Agony என்றால் மிகமிக அதிகமான உடல் துன்பம் அல்லது மன உளைச்சல் எனலாம்.
நாளிதழ்களிலோ பருவ இதழ்களிலோ வாசகர்களின் Agony- களை அவர்கள் வெளிப்படுத்த, அவற்றுக்குத் தீர்வுதரும் விதமாகச் சிலர் பதிலளிக்கிறார்கள்.
“சகோதரி! உன் கணவன் உன்னைக் கொடுமைப்படுத்துவதாக எழுதியிருந்தாய். அன்பால் அவனைத் திருத்து. தினமும் விதவிதமாக அவனுக்குச் சமைத்துப் போடு” என்பது போலவோ “குட்டக் குட்டக் குனியக் கூடாது. அவனுக்குத் தக்க பாடம் புகட்டு” என்பது போலவோகூட ஆலோசனைகள் அளிப்பார்களே, அவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்.
‘Un’ என்பதற்கும் ‘Dis’ என்பதற்கும் ஒரே அர்த்தம்தானா? எதிர்மறையான பொருளைக் குறிக்க இரண்டையுமே பயன்படுத்துகிறார்களே! என்றும் பல வாசகர்கள் கேட்கிறார்கள்.
Un என்பதற்கு எதிர்மறையாக என்ற அர்த்தம். Safe என்றால் பாதுகாப்பான. Unsafe என்றால் பாதுகாப்பில்லாத. இதே போலத்தான் wanted unwanted, aware unaware ஆகியவை.
Un என்று தொடங்கும் வார்த்தைகளுக்கும் dis என்று தொடங்கும் வார்த்தைகளுக்கும், அந்தத் தொடக்கங்கள் உண்டாக்கும் மாறுதல்கள் அதிகமில்லை. என்றாலும் Un என்பது இயல்பாகவே இப்போதுள்ள இருப்பைக் காட்டுகிறது. Dis என்பது ஒரு செயல்படுதன்மையை உணர்த்துகிறது. Allow disallow, Infect Disinfect என்பதுபோல.
EMANCIPATE EMACIATE
‘Emancipate என்பதற்கு அர்த்தம் தெரியும். Emaciate என்று ஒரு நாளிதழில் படித்தேன். அதற்கு என்ன அர்த்தம்?’’ என்கிறார் ஒரு வாசகர்.
Emancipation என்றால் விடுபடுவதற்கான செயல்முறை எனலாம். அதாவது சட்டம், சமூகம் அல்லது அரசியல் காரணமாக நேர்ந்த கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாவது. The social emancipation of women is inevitable. The struggle for emancipation from slavery.
Emaciation என்றால் மிகமிக ஒல்லியாகவோ, பலவீனமாகவோ இருக்கும் ஒருவரின் நிலை என்று அர்த்தம். “என்ன இப்படித் தேவாங்குபோல இருக்கிறாயே? என்றோ “அவன் ஆனாலும் ஒல்லிப்பிச்சானாக இருக்கிறான்” என்றோ கூறுகிறோமே அதுபோல. The images of emaciation of the people of Somalia present a painful picture.
Enunciation என்ற மற்றொரு வார்த்தையையும் பார்க்கலாமே. Enunciate என்றால் தெளிவாக ஒன்றை உச்சரிப்பது என்று அர்த்தம். The teacher enunciated each world slowly so that the students can understand better. Enunciation என்பது இதன் noun வடிவம்.
DIFFERENCE DIFFERENTIATION
Difference என்பதும் differentiation என்பதும் ஒன்றா? அல்ல. இரண்டுமே பெயர்ச் சொற்கள்தான். ஆனால் difference என்பது வித்தியாசம். Differentiation என்பது வித்தியாசப்படுத்தும் செயல். சிலவற்றை differentiate செய்து பார்க்கும்போது அவற்றில் உள்ள difference-ஐ நீங்கள் மனதில் கொண்டுதான் அந்தச் செயலைச் செய்கிறீர்கள். எதிரில் இரண்டு பேர் நிற்பதாக வைத்துக்கொள்வோம். “உங்களுக்கிடையே difference இல்லை’’ என்று சொன்னால் அவர்கள் ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இரட்டையர்களாக இருக்கலாம் அல்லது ஒரே மாதிரி எண்ணப் போக்கு கொண்டவர்களாக இருக்கலாம்.
எதிரில் நிற்பவர்களைப் பார்த்து “உங்களை differentiation செய்ய மாட்டேன்” என்று சொன்னால் ‘’என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒன்று. உங்களை ஒரே மாதிரிதான் நடத்துவேன்” என்பது போன்ற அர்த்தம் அதில் தொனிக்கிறது.